Categories
லைப் ஸ்டைல்

மாத்திரையை இப்படி சாப்பிடுறீங்களா…?? இனி அப்படி பண்ணாதீங்க…. ஆபத்து அதிகம்…!!

மாத்திரைகளை நாம் எந்த தட்பவெட்ப நீரை பயன்படுத்தி சாப்பிட வேண்டும் என்பதனை பார்க்கலாம்.

ஒவ்வொரு பொருளையும் நாம் சாப்பிடும் போது அதன் தன்மையை அறிந்து கொண்டு தான் உட்கொள்ள வேண்டும். இல்லையேல் அவை நம் உயிருக்கு ஆபத்து விளைவித்து விடும். அந்த வகையில் உடல்நல கோளாறுகளை தீர்க்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தவறான முறையில் தான் சாப்பிட்டு வருகின்றோம். இவ்வாறு சாப்பிடுவதால் நிச்சயம் பல ஆபத்துக்களை நமக்கு ஏற்படுத்தும். மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? அல்லது குளிர் நீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? எப்படி சாப்பிட்டால் ஆபத்து உண்டாகும் என்பது பற்றி பார்க்கலாம்.

நாம் சாப்பிடும் மாத்திரைகளை மற்ற உறுப்புகளுக்கு எடுத்துச் செல்ல ஒரு கருவியாக இருப்பவைதான் திரவப் பொருட்கள். இதில் தண்ணீர் மிக முக்கிய வகிக்கிறது. மாத்திரைகளில் பல வகைகள் உண்டு. அவற்றின் தன்மைக்கேற்ப தான் சரியான தட்பவெட்பம் உடைய நீரை பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கேப்ஸுல் மாத்திரைகள், வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், சாதாரண காய்ச்சல் மாத்திரைகளை சொல்லலாம். இவை ஒவ்வொன்றையும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப திரவ பொருளை பயன்படுத்த வேண்டும்.

விட்டமின் டி, கால்சியம் போன்ற மாத்திரைகளைப் பயன்படுத்தினால் பால் உட்க்கொண்டு சாப்பிடலாம். இது எல்லா வகையான மாத்திரைக்கும் ஏற்றது அல்ல. சில வகையான மாத்திரைகளுக்கு வெந்நீரைப் பயன்படுத்த கூடாது. கேப்ஸுல் மாத்திரைகளை வெண்ணீர் பயன்படுத்தி சாப்பிட்டால் நாக்கிலே ஒட்டிக்கொள்ளும். பாராசிட்டமால், தொண்டைவலி, இருமல் போன்ற மாத்திரைகள் சீக்கிரம் கரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்ல நாம் வெந்நீரை எடுத்து கொள்ளலாம்.

சிலர் மாத்திரைகளை அப்படியே வாயில் போட்டு சாக்லேட் மாதிரி சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுவது தவறு. மாத்திரை சாப்பிடும் பொது அதிக அளவு நீரை உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மாத்திரை வாயிலிருந்து வயிற்று பகுதிக்கு இறங்காமல் இருக்கும். அதனால் அஜீரண கோளாறுகள் ஏற்படும். மாத்திரையும் சரியாக வேலை செய்து. சிலர் சாப்பிட்ட அடுத்த நொடியே மாத்திரை விழுங்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். அப்படி சாப்பிட்டால் மோசமான விளைவுகளை நமக்கு தந்து விடும். எனவே சாப்பிட்டு குறைந்தது 15 நிமிடம் கழித்த பிறகு தான் மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.

Categories

Tech |