இந்த மாத்திரைகளை சாப்பிடும்போது மறந்து கூட இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்.
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உடலில் உள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பாக்டீரியா தொற்றுக்கு உட்கொள்ளும் penicillin, tetracycline, Ciprofloxacin போன்ற அன்டிபையோடிக் மருந்து களுடன் பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடக்கூடாது.
இவை மருந்து செயல்படும் தன்மையை குறைத்து விடக் கூடியவை. ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நுரையீரல் பிரச்சனைக்கு தியோபைலின், அல்புட்ரால் போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது குளிர் பானங்களை குடிக்கக்கூடாது. இவற்றில் உள்ள காபின் நச்சுத் தன்மையை ஏற்படுத்த கூடியவை.