Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

மாத்திரை தேவையில்லை…சர்க்கரை நோயிலிருந்து விடுபட…மூன்று வழிகள்..!!

பொதுவாக சர்க்கரை நோய் வந்துவிட்டால் நம் உடலில் இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவை நன்றாக குறைத்து, சர்க்கரை நோயை இயற்கையான முறையில் எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஒரு மூன்று முறைகளை இப்போது பார்க்கலாம்..!

இப்பொழுது பார்க்கப் போகும் முறைகளில் ஏதாவது ஒன்று, இல்லை என்றால் வாரத்திற்கு ஒன்று என்பதை மாற்றி, மாற்றியோ நீங்கள் பயன்படுத்தி வந்தால் போதும். இயற்கையான முறையிலேயே உங்கள் உடலிலுள்ள ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறைய ஆரம்பித்துவிடும்.

முதல் முறை:

கோவக்காய்:

இந்த காய் சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல அனைவருமே சாப்பிடலாம். பரம்பரை காரணமாக சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த காயை 35 வயது வயதில் இருந்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் சர்க்கரை நோய் வருவதை தடுக்க முடியும். ஒரு டம்ளர் ஜூஸ், ஒரு பத்து கோவக்காய் போதும்.

முதலில் ஒரு பத்து கோவைக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கட்டுப்படுத்திவிடும். மிக்ஸி ஜாரில்  நறுக்கி வைத்திருக்கும் கோவைக்காயை போட்டு தண்ணீர் விடாமல் முதலில் அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் விட்டு நன்றாக மையாக அரைத்து ஒரு டம்ளரில் வடிகட்டி கொள்ளுங்கள். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அளவிற்கு  48 நாள் குடித்து வாருங்கள். உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு குறையும். இது வெள்ளரிக்காய் ஜூஸ் மாதிரி தான் இருக்கும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேன் கலந்து குடிக்கலாம்.

அதிகம் குடிக்க வேண்டாம். ஏனென்றால் அது உடலில் சூடு, வயிற்று புண், உதடு வெடிப்பு போன்றவை வர ஆரம்பித்துவிடும் .அதேபோன்று வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் மட்டும் இந்த கோவக்காய் ஜூஸை குடியுங்கள்.

இரண்டாவது முறை:

 தேன்காய்,  மகாகனி .என கூறுவார்கள்.

 

இவை அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றால் விதையை எடுத்து உடைத்து பார்த்தீர்களென்றால் உள்ளே ஒரு பருப்பு இருக்கும். அந்த பருப்புகளை எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட வேண்டும். உடனே ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொண்டு குடியுங்கள். மென்றும் சாப்பிடலாம் ஆனால் அது கொஞ்சம் கஷ்டம். என் என்றால் ரொம்ப கசக்கும்.

தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். ஒரு விதையில் உள்ள ஒரு பருப்பை மட்டும் சாப்பிட்டால் போதும். இது சாப்பிட்டு ஒரு  மணி  நேரம் கழித்து வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இது மாதிரி 40 நாள் சாப்பிட்டு அதன் பிறகு உங்களின் சுகர் லெவலை பரிசோதனை செய்து பாருங்கள். உடலில்,  ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு 100க்கு மேல் உள்ளவர்கள் காலையில் ஒன்று, மாலையில் ஒன்று என சாப்பிடுங்கள். அது  மட்டுமல்லாமல் ரத்தத்தில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றிவிடும்.

மூன்றாவது முறை:

கொய்யா இலைகள், நிலவேம்பு இலை அல்லது வேப்பிலை, மாவிலை.

கொய்யா இலைகள் உடலில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். அதனால் கொய்யா இலைகள் நான்கை எடுத்துக்கொள்ளுங்கள். நிலவேம்பு அல்லது வேப்பிலையை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதுவும் உடலின் சர்க்கரை அளவை குறைக்கும். மாவிலைகள் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக்கும். ரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

இதை எப்படி பயன்படுத்த வேண்டும்.? ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீரை விட வேண்டும். இப்பொழுது இந்த தண்ணீரில்  எடுத்து வைத்திருக்கும் கொய்யா இலைகள், மாவிலைகள், நில வேம்பு இலைகள் அனைத்தையும் போட வேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்க வேண்டும். இப்பொழுது இலைகளில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் கலந்து தண்ணீர் நிறம் மாற ஆரம்பித்து விடும். இந்த நீரை வடிகட்டி கொள்ளுங்கள்.

இதை குடிக்கும் அளவிற்கு சூடு ஆறியவுடன், காலையில் வெறும் வயிற்றில் 48 நாளைக்கு ஒரு அரை டம்ளர் அளவிற்கு குடியுங்கள். அதில் தேனும், சர்க்கரையும் கலக்கக்கூடாது. இது ரொம்ப கசப்பாகத்தான் இருக்கும். முதல் நாள் குடிக்க கஷ்டமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும்.

சர்க்கரையை குறைப்பதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா என்று நினைத்தால் பக்கவிளைவுகள் வரக்கூடாது என்றால் கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகணும். இது நீரைக் குடித்த 48 நாள் கழித்து ஒரு சுகர் டெஸ்ட் எடுத்துப்பாருங்கள், அப்பொழுது இவைகளின் மகத்துவம் புரிய ஆரம்பித்துவிடும். சுகர் குறைந்ததும் இதை வாரம் இரண்டு நாள் சாப்பிட்டால் போதும்.

Categories

Tech |