Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்….. இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல… ரஜினி அதிரடி ட்விட்

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியீட்டு இருக்கின்றார்.

ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் வாயிலாக தன்னுடைய அரசியல் வருகையை மீண்டுமொருமுறை உறுதி செய்திருக்கிறார். குறிப்பாக ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31இல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நியாயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதம் சாராத ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம், அற்புதம், அதிசயம், நிகழும் என்று தன்னுடைய டுவிட்டர் மூலமாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

மேலும் அனைத்தையும் மாற்றுவோம் என்றும் கூறியிருக்கிறார். இப்பவும் இல்லனா, எப்பவும் இல்லை என்ற வகையில் தன்னுடைய டுவிட்டர் வாயிலாக தெரிவித்திருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராகவேந்திரா மண்டபத்தில் தன்னுடைய மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் பல மட்டத்தில் விதித்திருந்தார்.

நிர்வாகிகள் ரஜினி ஜனவரியில் கட்சி கண்டிப்பாக தொடங்குவதற்காக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் தன்னுடைய முடிவை விரைவில் தெரிவிப்பேன் என்று கூறுகிறார். இந்த நிலையில் தான் இன்று தன்னுடைய அரசியல் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.

Categories

Tech |