Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாத உதவித்தொகை வழங்க வேண்டும்…. மாற்றுத்திறனாளிகள் போராட்டம்…. தாசில்தார் பேச்சுவார்த்தை….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பாதிப்பு அதிகம் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 5,000 ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 3,000 ரூபாய் மாத உதவித் தொகையையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஹரிஹரசுதன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட குழு உறுப்பினர்களான முருகேசன், கோபால், கணேசன், தாலுகா தலைவர் நிலர்வேணி, சங்க நிர்வாகிகள் கணேசன், கருப்பையா,சதீஷ், நடராஜன் உட்பட பல்வேறு மாற்றுத்திறனாளிகளும் இதில் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த இராமநாதபுரம் தாசில்தார் மாற்று திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதி அளித்த பின்னரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |