அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 2020-2021 ஆம் நிதியாண்டில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டும் நடந்துவிட்டால் மாத ஊதியம் வாங்கும் கோடிக்கணக்கான அவர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய வட்டி விகிதம் குறித்து முடிவு செய்ய மார்ச் 4 ஆம் தேதி மத்திய அறங்காவலர் வாரியம் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.