மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டமாக அஞ்சலகத்தில் ஒரு திட்டம் ஒன்று உள்ளது. அதாவது தொடர் வைப்பு நிதி திட்டமாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக முதலீடு என்று எதுவும் கிடையாது. இந்த திட்டத்திற்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது. இதில் கூட்டு வட்டியும் உண்டு.
இந்த திட்டத்திற்கான முதிர்வுகாலம் ஐந்து வருடங்கள். மாதம் 2000 முதலீடு செய்தால் ஐந்து வருடங்களில் நீங்கள் செய்யும் மொத்த முதலீடு ரூபாய் 1.20 லட்சம் ஆகும். இதில் வட்டி விகிதம் ரூபாய் 19.395. கடைசியில் கிடைக்கும் தொகையானது 1,39,395 ஆகும்.