மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதியின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘மும்பை கார்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார் .
#Mumbaikar ☺️@santoshsivan sir. pic.twitter.com/PpOotUuohs
— VijaySethupathi (@VijaySethuOffl) March 22, 2021
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது . கோட், சூட், கூலிங்கிளாஸ் கண்ணாடியுடன் செம ஸ்டைலாக விஜய் சேதுபதி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.