Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாநகராட்சியின் முதல் கூட்டம்…. கவுன்சிலர்களுக்கு கடும் எச்சரிக்கை…. மேயர் மகேஷ் அதிரடி…!!

நல்ல விஷயங்களைச் செய்யும்போது அதை தடுப்பதற்கு கவுன்சிலர்கள் எந்த ஒரு முயற்சியும் எடுக்கக்கூடாது என்று மேயர் எச்சரித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் மாநகராட்சியின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஆணையர் ஆஷா ஆஜித், துணைமேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களுடைய கோரிக்கைகளை கூறினர். அதாவது‌ பல இடங்களில் சாலைகளில் ஜல்லிகல் மட்டும் கொட்டபட்டிருக்கிறது. ஆனால் சாலை அமைக்கும் பணி தொடங்காமல் இருக்கிறது. குப்பை வண்டிகளின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. நாகர்கோவில் பகுதியில் உள்ள கோட்டாறு முதல் செட்டிகுளம் வரையிலான சாலையை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதனையடுத்து மாநகராட்சியின் மேயர் மகேஷ் பேசினார். அவர் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக  தன்னை நியமித்ததற்கு தி.மு.க அரசுக்கு நன்றி கூறினார். நாகர்கோவில் நகர வளர்ச்சிக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைக்க வேண்டும். உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும். இருளப்பபுரம் பகுதியில் மீன் சந்தை  அமைந்துள்ளது. இந்த சந்தையை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக பூங்கா அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் சில கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே நல்ல விஷயங்களைச் செய்யும்போது கவுன்சிலர்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமே தவிர எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று எச்சரித்தார். நாகர்கோவில் மாநகராட்சியில் இருக்கும் அனாதை மடம் பகுதியில் உள்ள‌ மணல்கள் மாற்றப்படும். அதன்பிறகு மாநகராட்சியின் குடிநீர் ஊட்டுவாழ்மடம், ஆளூர், தெங்கம்புதூர் பகுதிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும். கவுன்சிலர்கள் கொண்டு வரும் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாகர்கோவில் மாநகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத மாநகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.

Categories

Tech |