சென்னை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க முதல்வர் நடவடிக்கையை மேற்கொள்வார் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக தற்போது ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அமல் படுத்தி வருகிறார். மேலும் மக்கள் குறைதீர் மன்றம் என்று தனியாக அமைத்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்.
அந்தவகையில் சென்னைக்கு அருகே உள்ள ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் தான் தங்களுக்கு அடிப்படை வசதி கிடைக்கும் என்று அந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கைகளை அமைச்சர் பெரியகருப்பன் இடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தக்க நேரத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நம்பிக்கையை கூறியுள்ளார்.