Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகராட்சி மன்ற கூட்டம்… ஜனவரி 15ஆம் தேதி வரை… சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!!!!!!

சென்னை மாநகராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம்  நடைபெற்றுள்ளது. மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணைமேயர்  மு மகேஷ் குமார், கமிஷனர் சுகன் தீப் சிங் பேடி போன்றோர்  முன்னிலை வகித்தனர். மேலும் நிலை குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கேள்வி நேரமும், கேள்வி இல்லா நேரமும் அடுத்தடுத்து எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மக்கள் பிரச்சனைகள் சார்ந்து கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைளுக்கு மேயர்  பிரியா பதிலளித்து பேசி உள்ளார். இதனைதொடர்ந்து  தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு  கால அவகாசம் நீட்டிப்பு செய்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அந்த வகையில்  தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான காலஅவகாசம்  அடுத்த வருடம் ஜனவரி 15-ஆம் தேதி நீட்டிக்கப்படுகிறது. கடந்த 15-ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |