Categories
மாநில செய்திகள்

மாநகராட்சி மாமன்ற கூட்டம்… பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!!

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி பணிகள் துறையானது நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த மாமன்ற கூட்டத்தில் துணை மேயர் எம் மகேஷ் குமார், ஆணையர் சுகன் தீப் சிங் பேடி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இந்நிலையில் இந்த மாமன்ற கூட்டத்தில் 80 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 79 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்படும் கட்டட அனுமதியானது சி.எம்.டி.ஏ மற்றும் சென்னை மாநகராட்சி சார்பாக இணையவழியில் அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி பணிகள் துறையானது “நகர திட்டமிடல் துறை” என பெயர் மாற்றப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இணைய வழியில் கோரப்படும் விண்ணப்பத்தில் கூடுதல் தகவல்களுக்கு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும் விண்ணப்பதாரருக்கான கடிதம் “தெளிவுபடுத்துவதற்கான கோரிக்கை” எனவும் கட்டணம் செலுத்தும் முறை தற்காலிக மேம்பாட்டு கட்டணம் என்பதற்கு பதிலாக “சாலை உருவாக்க கட்டணம்” எனவும்  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |