Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாநகராட்சி வாகனத்திற்கு அடியில் படித்து கொண்ட வியாபாரி…. 1 மணி நேர போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பார்வதிபுரம் பாலம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பழக்கடை வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர். இதனையடுத்து அதிகாரிகள் பழ கடையை அப்புறப்படுத்த முயன்ற போது வியாபாரியான சுதீர்தீன் என்பவர் மாநகராட்சி டெம்போவின் கீழ் படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஊழியர்களால் வாகனத்தை இயக்க முடியவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் அதற்கு உடன்படவில்லை. இதனால் போலீசார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வலுக்கட்டாயமாக வியாபாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |