500 பேருந்துகளில் பயணிகளின் இருகைக்கு பின்புறமாக ஏ4 அளவில் விளம்பரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் வருவாயை பெருக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது மாநகர பேருந்துகளின் பின்புறத்திலும் டிரைவர் இருக்கையின் பின்புறத்தில் மட்டும் விளம்பரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறைந்த அளவில் வருவாய் கிடைப்பதால் மற்ற பகுதிகளிலும் விளம்பரம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. பஸ்ஸின் இரண்டு பக்கமும் தனியார் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டது. பிற மாநிலங்களில் அரசு பேருந்துகளில் இரண்டு பக்கவாட்டில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல சென்னை மாநகர பேருந்துகளிலும் விளம்பரம் செய்வதன் மூலம் வருவாய் அதிகரிக்க முடியும் என்று கூறப்பட்டது.
அதன்படி மூவாயிரம் பேருந்துகளில் விளம்பரம் செய்வதற்கு டெண்டர் விடப்பட்டது. இது தவிர 500 பஸ்களில் பயணிகளின் இருகைக்கு பின்புறம் ஏ4 அளவில் விளம்பரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இருக்கையில் விளம்பரம் செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கு வரவேற்பு கிடைப்பதை பொறுத்து அடுத்து ஆயிரம் பேருந்துகளில் இதை செய்ய அனுமதிக்கப்படும் என்று மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்தார். மேலும் அடுத்த பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியிடும்போது இடையிடையே தனியார் தொழிலில் சார்ந்த விளம்பரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பு தொடர்ந்து இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.