தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் எஸ்.கே. சூர்யா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பல பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக நவம்பர் 25 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஆனால் கடைசியாக ஏற்பட்ட பண பிரச்சனையின் காரணமாக அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
இந்தப் பிரச்சினை எல்லாம் தாண்டி மாநாடு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் மாநாட்டு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேட்டியில் கூறியது, “மாநாடு திரைப்படத்தை வாங்கிய தியேட்டர்கள், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸை ஆகியவர்கள் லாபம் அடைந்து இருக்கின்றனர். ஆனால் ஒரு தயாரிப்பாளராக எனக்கு எந்த ஒரு லாபமும் கிடைக்க வில்லை.
இதற்குக் காரணம் சிம்புவின் முந்தைய படத்தின் வசூல் ஆகும். ரிலீசுக்கு முன்பு சில விஷயங்கள் இருக்கிறது. அது எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் நான் தயாரித்த படம் வெற்றி நடைபோடுகிறது. மேலும் எனக்கு லாபம் கிடைக்காமல் போனதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. சிம்புவின் முந்தைய படம் வெற்றி பெற்றிருந்தால் எனக்கு லாபம் கிடைத்திருக்கும். எனவே மாநாட்டை அடுத்து வெளியாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு நிச்சயம் நல்ல லாபம் கிடைக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.