சிம்புவின் மாநாடு படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் எஸ்.ஜே. சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாநாடு படத்தின் முதல் பாடல் வருகிற ஜூன் 21-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் மாநாடு படத்தின் டிரைலர் வருகிற பக்ரீத் பண்டிகையையொட்டி அதாவது ஜூலை 21-ஆம் தேதி ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.