இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மாநாடு படத்தின் புதிய அப்டேட்டை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
First single teaser of Maanaadu is releasing today at 6PM! 😇@SilambarasanTR_ @vp_offl @sureshkamatchi @kalyanipriyan#Meherezylaa #Maanaadu pic.twitter.com/Sk0uDYGzPb
— Raja yuvan (@thisisysr) June 19, 2021
வருகிற ஜூன் 21-ஆம் தேதி மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மாநாடு படத்தின் புதிய அப்டேட்டை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மாநாடு படத்தில் இடம் பெற்ற மெஹ்ரேஸிலா என்ற பாடலின் டீசர் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.