மாநாடு படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
#MaanaaduPreReleaseTrailer releasing today at 5 PM 😊@SilambarasanTR_ @thisisysr @therukuralarivu @vp_offl @Premgiamaren @sureshkamatchi @kalyanipriyan @iam_SJSuryah @Anjenakirti @madhankarky @Richardmnathan @Cinemainmygenes @UmeshJKumar @johnmediamanagr @U1Records
— sureshkamatchi (@sureshkamatchi) November 19, 2021
ஏற்கனவே இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மாநாடு படத்தின் புதிய டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த டிரைலருக்காக சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.