சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Happy update: we r ready for our audio launch soon. Wl inform the date asap. Stay connected. ❤️ u all.
— sureshkamatchi (@sureshkamatchi) November 9, 2021
இந்த படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் மாநாடு படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘மாநாடு படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு தயாராக இருக்கிறோம். விரைவில் தேதியை அறிவிக்கிறோம்’ என தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.