Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் டீஸர் ரிலீஸ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் முதல் பாடல் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் வருகிற ஜூன் 21-ஆம் தேதி மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது.

இந்நிலையில் மாநாடு படத்தில் இடம்பெற்ற மெஹெரேஸிலா என்ற பாடலின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் வெங்கட் பிரபு மற்றும் யுவன் இருவரும் இந்த பாடல் குறித்து பேசியுள்ளனர். அதில் மெஹெரேஸிலா என்ற  வார்த்தைக்கு பல அர்த்தம் இருப்பதாகவும், அது பாடலாசிரியர் மதன் கார்க்கிக்கு மட்டுமே தெரியும் எனவும் வெங்கட்பிரபு கூறுகிறார். மேலும் இது தங்களது மற்றொரு குடும்ப பாடல் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பாடலுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |