சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் எஸ்.ஜே. சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Here is the lyrical video of #meherezyla from #maanaadu celebrate music!! spread love!! Happy world music day!!!https://t.co/xXOMmmsNJt@SilambarasanTR_ @vp_offl@sureshkamatchi@kalyanipriyan@iam_SJSuryah@madhankarky
— Raja yuvan (@thisisysr) June 21, 2021
இந்நிலையில் மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. மெஹரஸைலா என்ற இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா, பவதாரணி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். தற்போது இந்த அழகிய பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.