Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாநாடு’ படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர்… வலைத்தளங்களில் பரவும் தகவல்…!!

நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் நடிக்கயிருந்த பிரபல நடிகர் படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் பரவுகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருந்த பாரதிராஜா படத்திலிருந்து விலகியதாக தகவல் பரவுகிறது . பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் பாரதிராஜாவுக்கு ‘மாநாடு’ படத்தில் நடிக்க தேதி ஒதுக்க முடியாததன் காரணமாக படத்திலிருந்து விலகியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் படக்குழு தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

Categories

Tech |