Categories
மாவட்ட செய்திகள்

“மாநாடு படத்துக்கு டிக்கெட் வேணுமா?….எங்கள் கட்சியில் சேருங்க ஃப்ரீயா தாரோம்…..” காங்கிரசின் புது உத்தி….!!

மாநாடு படத்திற்கு இலவசமாக டிக்கெட் வழங்கி காங்கிரஸ் கட்சி ஆள் சேர்த்து வருகிறது.

கோவை மாநில காங்கிரஸார் கோவையில் மாநாடு படம் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று அங்கு வரும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் அவர்களுடைய ஆதார் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொண்டு,” காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சேர்ந்து விடுங்கள் உங்களுக்கு மாநாடு படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக தருகிறோம்.”என்று கூறியுள்ளனர். அதிலும் ஒரு காங்கிரஸ் நிர்வாகி “எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் டிக்கெட்டை உண்டு ஆனால் அத்தனை பேரும் காங்கிரஸில் சேர வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

காங்கிரசாரின் இந்த செயலால் படம் பார்க்க வரும் மக்கள் தலை சுற்றிப் போய் திரும்பி செல்கின்றனர். மேலும் ஒரு சிலர் ஏதோ ஆதார் கார்டை எடுத்து வருகிறேன் என கூறி விட்டு திரும்பும் நிலையையும் காணமுடிகிறது. இதிலிருந்து தெரிவது யாதெனில் முன்னொரு காலத்தில் கட்சி தொண்டர்களை வைத்து மாநாடு நடத்தினர். தற்போது “மாநாடு”சினிமாவை வைத்து கட்சியையே நடத்துகின்றனர் காங்கிரசார். காமராஜர் போன்ற மாபெரும் தலைவர்கள் இருந்த காங்கிரஸ் கட்சியின் நிலை தற்போது இவ்வாறு ஆகியுள்ளது என்பது என்னடா இது காங்கிரசுக்கு வந்துள்ள கொடுமை என்று யோசிக்க வைக்கிறது.

Categories

Tech |