மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படம் மாநாடு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது படக்குழுவினர் சென்னை திரும்பினர். தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில் மாநாடு படக்குழுவினர் குறைந்தளவு நடிகர்களை வைத்து ஒரு படத்தை முடித்துவிட்டு பிறகு மாநாடு படத்தை தொடங்கப் போவதாக செய்திகள் வெளிவந்தது. இதனால் ரசிகர்களிடம் மாநாடு திரைப்படம் பிறகு எடுக்கப்படுமா போன்ற பல கேள்விகளை சமூக வலைத்தளங்களில் எழுப்பினர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டர் பக்கத்தில் மாநாடு திரைப்படத்தின் அப்டேட் குறித்து அனைவரும் கேட்கிறார்கள் ஆனால் அரசாங்கம் எப்பொழுது படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கும் என்று ஒட்டுமொத்த திரையுலகமே காத்துக்கொண்டிருக்கிறது அனுமதி கிடைத்தவுடன் படப்பிடிப்பை தொடங்கி விடுவோம். முதலில் குறைந்த நடிகர்கள் உள்ள காட்சிகளை எடுத்துவிட்டு பிறகு மற்ற காட்சிகளை எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார் .