சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள மாநாடு படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மகிழ்வோடு வெற்றியைப் பகிர்ந்து கொண்டோம். ❤@SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah @kalyanipriyan @thisisysr @Anjenakirti @Richardmnathan @UmeshJKumar @silvastunt @Cinemainmygenes pic.twitter.com/gmN9gSDX4u
— sureshkamatchi (@sureshkamatchi) November 26, 2021
இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மாநாடு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .