Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாநாடு ‘ ஸ்பெஷல் அறிவிப்பு … ரெடியா இருங்க சிம்பு ஃபேன்ஸ்… ட்வீட் போட்ட வெங்கட் பிரபு…!!

இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படம் குறித்த ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை நாளை காலை வெளியிடுவதாக பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுல பிரபல நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும்  வரவேற்பை பெற்றது. இதையடுத்து சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் டுவிட்டரில் மாநாடு திரைப்படம் குறித்த ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை நாளை காலை  09:09 மணிக்கு வெளியிடுவதாக இயக்குனர் வெங்கட்பிரபு பதிவிட்டுள்ளார். இதனால் உற்சாகமடைந்த சிம்பு ரசிகர்கள் அந்த ஸ்பெஷல் அறிவிப்பை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் .

Categories

Tech |