மாநிலங்களவையில் காலியாக இருக்கும் 11 இடங்களுக்கு அடுத்த மாதம் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. 245 பேர் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 11 இடங்கள் காலியாக உள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட போக்குவரத்து அமைச்சர் திரு. அக்திக்சிங்பூரி சமாஜ்வாதி மூத்த தலைவர் திரு. ராம்கோபால் யாதவ் உள்ளிட்ட 11 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 25-ஆம் தேதிக்கு முடிவிற்கு வருகிறது. அதை கருத்தில் கொண்டு இந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 20-ஆம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறும்.