Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்: இன்றுடன் நிறைவுபெறும் வேட்புமனு தாக்கல்….!!!!!

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. நேற்று அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பாளர்களாக சிவி சண்முகம் ஆர் தர்மா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் பா சிதம்பரம் அவர்களும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. மக்களவை தேர்தலில் 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் போட்டியிடுகிறார்.

Categories

Tech |