Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களிடம் 1.92 கோடி டோஸ் தடுப்பூசி கையிருப்பு…. மத்திய சுகாதார அமைச்சகம்….!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 29.68 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் 1.92 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாகவும், அடுத்த ஓரிரு நாட்களில் மேலும் 39.07 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |