ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது என்று சரத்பவார் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று அமராவதியில் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது தொண்டர்களிடையே பேசிய அவர், மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் மூலமாகவும் மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைகளை உருவாக்கி அதன் மூலமாகவும் தலைவர்களுக்கு எதிரான விசாரணை நடத்துவதன் மூலமாகவும் ஆட்சியில் இல்லாத இரு மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது.
மேலும் மத்திய அரசின் இந்த முயற்சியை தேசியவாத காங்கிரஸ் முறியடிக்கும் அதற்கு எதிரான முழு பலத்துடன் போராடும் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது. மக்களிடையே வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்து அவர்களின் கவனத்தை வேறு பிரச்சினைகளை திசை திருப்புகிறார்கள் எனவும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த தலைவர் இந்துக்களிடையே அமைதியின்மை உருவாக்குவதற்காக நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திரைப்படத்தை மக்களுக்கு காண்பித்தல் மத்திய அரசு ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறது. மத அடிப்படையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.