Categories
தேசிய செய்திகள்

மாநிலமே இருளில் மூழ்கும் அபாயம்…. மின்துறை ஊழியர்கள் பரபரப்பு அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் மின்துறையில் தனியார்மயமாக்கத்தை கைவிடக்கோரி மின்துறை ஊழியர்கள் அனைவரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். தனியார்மயமாக்கலால் மின்துறை ஊழியர்களுக்கு பாதிப்பு இருக்காது என்ற அரசின் கருத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ள போராட்ட குழுவினர், நாங்கள் அரசு ஊழியர்களாகவே ஓய்வு பெற விரும்புகிறோம் என்று கூறினர்.

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் மின்வினியோகம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட உள்ளது.

Categories

Tech |