Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. கிரீன் சிக்னல் காட்டிய அரசு….!!!!

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்க் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையினாலும், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிகிறது. டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி கொள்ளுங்கள் என்று டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியது.

அதன் பின்னர் பள்ளி, கல்லூரிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 1 வாரத்திற்கு மூடியது. மேலும் கட்டுமான பணிகளுக்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மீண்டும் பள்ளிகளை திறப்பது பற்றி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு டெல்லி பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைகளை அனுப்பியது. அதில் காற்றின் தரம் மேம்பட்டு வருவதால் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை உடனடியாக திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது காற்று தர மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனையடுத்து டெல்லியில் இன்று 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவ தாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் நேரடி வகுப்பில் மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி வரும் 27-ம் தேதிக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |