Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் சூதாட்ட கிளப்புகள் மீது நடவடிக்கை…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் கிளப்புகள் நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது விற்பனை, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, மணல் மற்றும் கஞ்சா கடத்தலை கண்டுகொள்ளாமல் இருப்பது போலீசாருக்கு மாமுல் தரக்கூடிய தொழிலாக தற்போது மாறிவிட்டது. இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துணை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநில முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். மாநில முழுவதும் சட்டவிரோத சூதாட்ட கும்பல் அதிகரித்து வருவதால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் சட்ட விரோதமாக செயல்படும் இழப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |