நாடு முழுவதும் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக கொண்டாடப்படும் சத் பூஜையை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.யமுனை நதிக்கரையை தவிர நியமிக்கப்பட்ட மற்ற இடங்களில் பூஜை கொண்டாட்டங்களை டெல்லி அரசு அனுமதித்துள்ளது.
முன்னதாக கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளை மேற்கோள்காட்டி திருவிழாவை பொதுவில் கொண்டாட டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி சத் பூஜையை கொண்டாட அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே மாநிலம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.