Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் நாளை முதல் பள்ளிகள் மூடல்….. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து இயல்புநிலைக்கு வந்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 3-ம் நிலை பாதிப்புகள் தொடங்கி இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோன்று கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் 1 முதல் 9- ஆம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை முதல் மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் தொடரும் எனவும் அறிவிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |