சென்னை கோடம்பாக்கம் கணபதி அரசு பள்ளியில் வைத்து தனியார் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 174 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதவித்தொகை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜெய் கருணாநிதி மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர், பாலியல் வன்முறைகள் குறித்து மாணவிகள் துணிந்து புகார் அளிக்க வேண்டும். பள்ளிகளில் கண் பார்வை குறைபாடு போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு தான் தற்போது மருத்துவர்கள் இருக்கிறார்கள். எனவே உளவியல்ரீதியாக மருத்துவர்களை எப்படியும் மாற்றலாம்? என்று ஆலோசனை செய்து பிறகு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு ஏற்படும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதனை தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்கள் மீது மோதலை எப்படி கையாள வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்கள் மாணவர்களை மிருகத்தனமான தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேருந்துகளில் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து சேவை இயக்குவது குறித்து போக்குவரத்து துறையிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே புதிய கல்விக் கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்த போதும் கண்ணும் கருத்துமாக செயல்படுவோம் என்று அவர் கூறினார்.