தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. இதன் காரணமாக மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மேலும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் மீண்டும் பள்ளிகளை மூட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையில் பேருந்து, மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களை மூடவும், அனைத்துவித கொண்டாட்டங்களுக்கும் தடை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.