நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா காரணமாக ஜனவரி 30-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மேலாண்மை ஆணையம் பிப்ரவரி 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் மீண்டும் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையின் காரணமாக, மாணவர்கள் கல்வியில் இழப்பு ஏற்படுவதாக கூறி ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்திற்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகள் மட்டும் அதிக மாதங்கள் மூடப்பட்டிருக்கின்றன. எனவே அனைத்து பள்ளிகளையும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்க வேண்டும் என்று பள்ளி மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.