Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் மது கடைகள் மூடல்…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு திடீர் உத்தரவு….!!!!

புதுச்சேரி மாநில கலால் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு காவல்துறை ஆணையர் ஆணையின்படி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏணாம் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும்,மது அருந்து அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அன்றைய நாளில் அனைத்து கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |