தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1,700 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பெலகாவியில் செய்தியாளர்களிடம் கூறியது, கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பரவலை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால் கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமல்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.