Categories
மாநில செய்திகள்

“மாநில அரசின் உரிமை பறிப்பு”…. மத்திய அரசை கண்டித்த முதல்வர்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது.அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக மாணவர்கள் நீட் தேர்வு மூலம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரியில் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மேலும் நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு இதுவரை அனுப்பப்படவில்லை. இதனைத் தொடர்ந்து வருகின்ற 8 ஆம் தேதி நீட் விவகாரம் குறித்து அனைத்துகட்சி கூட்டம் நடைபெறும்.  நீட் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நீட் விவகாரத்தில் மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது. எனவே மத்திய அரசின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |