இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி வினியோகம் பற்றி மத்திய சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பல்வேறு மாநில அரசுகளுக்கு தற்போது வரை 21 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில் 19 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டு கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநில அரசுகளிடம் கையிருப்பில் இருக்கின்றது.
மேலும் அடுத்து வருகின்ற மூன்று நாட்களில் 26 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. நாடு முழுவதிலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது ஒரு சில மாநிலங்களில் மட்டும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.