Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகள் மாஸ்க்கை கட்டாயமாக அணிய அறிவுறுத்த வேண்டும் – அமைச்சர் மன்சுக்  மாண்டவியா..!!

மாநிலங்களவையில் முகக் கவசத்தை அனைவரும் கட்டாயமாக அணிய வேண்டும் என அமைச்சர் மன்சுக்  மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா பேசியதாவது, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையால்  கொரோனா அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மாநில அரசுகள் மக்களை அறிவுறுத்த வேண்டும். புதிய வகை கொரோனா தொற்றை கண்டறிய சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வந்தாலும் முக கவசம் அணியுமாறு வலியுறுத்தி வருகிறோம். புதிய வகை கொரோனா தொற்று பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருமாறிய புதிய பிஎப்.7 வகை கொரோனா இந்தியாவிலும் நேற்று 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இதனை முன்கூட்டியே தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. புதிய வகை கொரோனா பரவுவதால் அனைத்து மாநில அரசுகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய அமைச்சர் அறிவுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |