கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. கேரளாவில் ஒமிக்ரான் பரவலை தடுக்க கேரள அரசு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில், ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் கொரோனா பரிசோதனை செய்வதை அதிகரித்தல், தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துதல் ஆகிய பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் அடிப்படையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டமான மெடிசெப் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை வருகிற ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேருவதற்கு 500 ரூபாய் மாதந்தோறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
இத்திட்டத்தில் இணைவதன் மூல,மாக ஊழியர்களின் குடும்பத்திற்கு 3 வருட பாலிசி காலத்திற்குள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் என மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இவற்றில் மாநில அரசு ஊழியர்கள், பகுதி நேர பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உதவி பெறும் பள்ளிகளில் இருப்பவர்கள், ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.