இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனாபரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அசாம் மாநிலம் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அசாம் மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விடுமுறை ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களும் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த விடுமுறையானது அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் விடுமுறை முடிந்த பிறகு அலுவலகத்திற்கு செல்லும் போது அவர்களது பிள்ளைகள்,மனைவி, மற்றும் பெற்றோர் மாமனார், மாமியார் ஆகியவர்களோடு நேரம் செலவிட்டதை உறுதிசெய்ய புகைப்பட ஆதாரத்தை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விடுமுறை பற்றி முதல்வர் ஹிம்ந்தா பிஸ்வா சர்மா கூறியது, இந்த விடுமுறையானது பண்டைய இந்தியாவின் மதிப்புகளை நிலைநிறுத்த அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அடுத்த வருடம் கீழ்நிலை ஊழியர்களுக்கு தங்களின் பெற்றோர்களை புனித யாத்திரைக்கு அல்லது சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல தகுந்த உதவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.