மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் காரைக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
மாநில அளவிலான சப்-ஜூனியர் தரவரிசை இறகுப்பந்து, சென்னை மாவட்ட இறகுப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் சார்பில் சென்னையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 13 வயதிற்கு உட்பட்ட 200 மாணவிகள் இந்த இறகுப்பந்து போட்டியில் கலந்து கொண்டனர். இந்த இறகுப்பந்து போட்டியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியை சேர்ந்த மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரி கலந்து கொண்டார். மாநிலம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட மாணவிகளை வெற்றி கொண்டு ராஜராஜேஸ்வரி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சிவகங்கையில் இறகுப்பந்து போட்டியில் கலந்துகொண்டு மாநில தரவரிசையில் பங்கேற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் மாணவி ராஜராஜேஸ்வரி ஆவார். மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்த மாணவிக்கு சிவகங்கை மாவட்ட பயிற்சியாளர்கள் வீரபாண்டி, பகவதி ராஜா, சிவகங்கை மாவட்ட இறகுப்பந்து கழக செயலாளர் எஸ். பாரூக் ஆகியோர் பாராட்டி பரிசினை வழங்கியுள்ளனர்.