மாநில அளவிலான கபடி போட்டியானது பழனியில் நடைபெற்றது. இவற்றில் திண்டுக்கல், திருப்பூர், மதுரை, திருச்சி மற்றும் கோவை உட்பட பல மாவட்டங்களிலிருந்து 56 அணிகள் பங்கேற்றது. இந்த போட்டியை வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி துவங்கி வைத்தார். அத்துடன் கபடி கழக மாநில துணை செயலாளர் ரமேஷ் இதற்கு முன்னிலை வகித்தார்.
போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து போட்டியில் பழனி அ.கலையம்புத்தூர் அணி முதலிடத்தை பிடித்தது. உடுமலை, தாராபுரம் அணிகளானது முறையே 2-ம், 3-ம் இடத்தை பிடித்தது. அதன்பின் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.