Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான சிலம்பப் போட்டி‌…. 12 பதக்கங்களை வென்று மாணவ-மாணவிகள்‌ சாதனை….. குவியும் பாராட்டு‌‌….!!!!

சிலம்பம் போட்டியில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவமாணவிகள் கல்வியில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். இதில் குறிப்பாக விளையாட்டு துறையில் பல்வேறு மாணவ-மாணவிகள் சாதனை படைக்கின்றனர். இப்படி விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் பல்வேறு விதமான உதவிகளை செய்வதோடு, வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் கல்வியில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதோடு விளையாட்டு துறையில் சாதனைப் படைக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை மாவட்ட, மாநிலம் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி பகுதியில் மாநில அளவிலான சர்வதேச சிலம்ப போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்த பல்வேறு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கரூர் மாவட்டம் குந்தாணி பாளையத்தை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டு 5 தங்கப்பதக்கம், 5 வெள்ளி பதக்கம் மற்றும் 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் பதக்கங்களுடன் சொந்த ஊருக்கு  திரும்பியும் சிறுவர்-சிறுமிகளுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Categories

Tech |