மாநில அளவிலான தடகள போட்டியில் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு தடகள மன்றம் சார்பாக கோயம்புத்தூரில் 94வது தமிழ்நாடு மாநில சீனியர் தடகள போட்டிகள் சென்ற 13ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றார்கள்.
இதில் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வேலூர் மாவட்டம் முத்துரங்கம் அரசு கலை கல்லூரி மாணவர்களான லோகேஷ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.