Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாநில அளவிலான நீச்சல் போட்டி …. வெற்றி பெற்ற மாணவர்கள் …. குவிந்து வரும் பாராட்டுக்கள் ….!!

மாநில அளவிலான   நீச்சல் போட்டியில்  வெற்றி பெற்ற மாணவர்களை பேராசிரியர்களை  பாராட்டியுள்ளனர் .

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின்  மாணவர்களான சர்மிளா, ஜெய்ஷா, ஜெயந்த், நர்மதா, கீர்த்திகா, நவீன், சதீஷ் கனி, நிதிஷ் கார்த்திகேயன், நந்து விக்ரம், ஜெசூர்யா ஆகியோர் ஈரோட்டில் நடைபெற்ற  தமிழ்நாடு மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 9 தங்கப்பதக்கங்கள், 9 வெள்ளிப்பதக்கங்கள், 5 வெங்கல பதக்கங்களை வாங்கி  மாநில அளவில்  சாம்பியன்ஷிப் பட்டத்தை  வென்றனர். இதனையடுத்து  பல்கலைக்கழக துணை தலைவர் சசி, ஆனந்த், உடற்பயிற்சி இயக்குனர் செல்வகணேஷ், நீச்சல் பயிற்சியாளர் உதயகுமார், துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் மாணவர்களை பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |